Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அம்மா நான் கர்ப்பமா இருக்கேன்…. 17 வயது சிறுமியை சீரழித்த 20…. அதிர்ந்த பெற்றோர்…!!

இலங்கை அகதி முகாமில் உள்ள சிறுமியை வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் பக்கத்தில் இலங்கை அகதிகள் முகாம் இருக்கிறது. இந்த அகதிமுகாமில் 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்தச் சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்ற வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய கர்ப்பம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தீனதயாளனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |