மனைவியும் இரண்டு வயது குழந்தையும் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் அருகே மணல் மேட்டை சேர்ந்த முருகேசனின் மனைவி சர்மிளா தனது 2 வயது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவியும் குழந்தையும் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் மனைவி குழந்தையை தேடியுள்ளார் முருகேசன். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் குழந்தை மற்றும் மனைவியை காணவில்லை என தந்தொனிமலை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். முருகேசன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் குழந்தையும் தாயும் காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.