தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அம்மா சிமெண்ட் சார்பாக குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அம்மா சிமெண்ட் விலை மூட்டைக்கு 190 லிருந்து 216 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2015 முதல் ஒரு மூட்டைக்கு 185க்கும் ஒரு சாக்கின் விலை ஐந்து ரூபாய் என மொத்தமாக 190 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றன.
கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒரு சிறிய வீடு கட்ட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூட்டைக்கு 26 ரூபாய் அதிகரித்துள்ளது. சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருள் விலை, தொழிலாளர் ஊதியம் ஆகியவற்றின் விலை உயர்வு இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.