அம்மா இருசக்கர வாகனத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலில் இருந்து வருகிறது. இதன் மூலம் வேலைப்பார்க்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
இதில் மானியம் 50% அல்லது ரூ.25,000/- தொகை வழங்கப்படும். உதாரணத்திற்கு ரூ.75,000/- இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு அம்மா வாகன திட்டத்தில் ரூ. 25,000/- மானியம் கொடுக்கப்படும். ரூ.50,000/-ற்குள் வாகனம் பெறுபவர்களுக்கு அதில் 50% மானியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்கவேண்டும்:
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெண்கள் 18 முதல் 45 வயதிற்குள் இருக்கவேண்டும். விண்ணப்பிக்கும் பெண்ணின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு கீழ் இருக்கவேண்டும்.
- பிறப்பு சான்றிதழ்,
- வருமான சான்றிதழ்,
- சாதி சான்றிதழ்,
- ஆதார் கார்டு,
- கல்வி சான்றிதழ்,
- வங்கி கணக்கு புத்தகம் நகல்,
- வேலையில் பணிபுரிந்தால் அதற்கான சான்றிதல்,
- புகைப்படம்.
விண்ணப்பிக்கும் முறை
http://www.tamilnadumahalir.org/ என்ற வலைதளத்தில் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யவும். பின்னர் அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பி BDO அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் சென்று கொடுக்க வேண்டும். மேலும் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் நகல் எடுத்து சரியாக இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.
மானியத்திற்கான அறிவிப்பு வெளியான பின்பு முதலில் விண்ணப்பம் கொடுத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.