Categories
அரசியல் மாநில செய்திகள்

25.11.2016இல் OK சொன்ன அம்மா…. ஏன் சசிகலா செய்யல..? சசி மீது ஜெயக்குமார் காட்டம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வு பெற்ற நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில்,  ரிப்போர்ட் தெளிவா இருக்கு..  அதாவது 25.11.2016 அந்த தேதியில்…  அம்மா, திருமதி சசிகலா, அதே போல அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர், அப்பல்லோ மருத்துவமனையின்  மருத்துவர். அதுக்கு முன்னாடி GAC கார்டியோ ஆஞ்சியோகிராம் பண்ணலாம்னு ஒரு டிஸ்கஷன் வச்சிட்டு, அந்த டிஸ்கஷனின் அடிப்படையில் அம்மா கிட்ட போறாங்க.

இந்த மாதிரி GAC  பண்ணலாம்னு. அம்மாவும் ஒத்துக்கிறாங்க.இது விசாரணை ஆணைய அறிக்கையிலே இருக்கு. அப்போ அம்மாவும்  எனக்கு ஆபரேஷன் பண்ணுங்கன்னு  சொல்லும்போது…  ஏன் அதை  ஆப்ரேஷன் பண்ணல ? ஏன் வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போகல ?  அதுதான் இப்போது கேள்வி.  கமிஷன் ரிப்போர்ட்டிலேயே என்ன சொல்லி இருக்கு ? அம்மா ஒப்புதல் கொடுத்துட்டாங்க அப்படின்னு இருக்கிறத….

மறச்சு இந்த மாதிரி பேசக்கூடாது. நாலு பேரு இருந்தாங்க. அன்னைக்கு காலையில் அம்மா  மருத்துவமனையில் இருக்கும் போது…  வெளியே டிஸ்கஷன் பண்ணிட்டு, அம்மா கிட்ட போய் சொல்லும் போது….  அம்மாவே ஒத்துக்கிட்ட ஒரு விஷயத்தை எதுக்கு  பண்ணல ?

GAC பண்ணி இருந்தா அம்மா இந்நேரம் இருந்து,  மீண்டும் 2021 ஆட்சியை பிடிச்சி மீண்டும் அம்மாவுடைய ஆட்சி வந்திருக்கு. 25.11 2016க்கு பிறகு அடுத்தபடியாக மரணம் தான். எனவே அந்த மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான்  நாங்கள் எதிர்பார்க்கின்ற ஒரே நீதி. அதேபோல அம்மாவுடைய ஆத்மா வந்து சும்மா விடாது. அவங்களை தூங்க விடாமல் பண்ணும்  நிச்சயமாக என பேசி முடித்தார்.

Categories

Tech |