Categories
தேசிய செய்திகள்

அம்மா!… “நீங்கள் அன்புக்காக மட்டும் தான் அனைத்தையும் செய்தீர்கள்”…. பிரியங்கா காந்தியின் உருக்கமான பதிவு….!!!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டிக்கு எம்பி சசி தரூர் மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் நேரடியாக போட்டியிட்ட நிலையில், கார்கே வெற்றி பெற்றார். அதன் பிறகு டெல்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி, எம்.பி ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, எம்பி சசிதரூர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கார்கே சோனியா காந்தியிடம் ராஜீவ் காந்தியின் புகைப்படத்தை கொடுத்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பதவியில் இருந்த சோனியா காந்தி தன்னுடைய கணவரின் புகைப்படத்தை வாங்கியவுடன் அதை உயர்த்தி பிடித்து அனைவருக்கும் காட்டினார். இதை பார்த்தவுடன் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் பிரியங்கா காந்தி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் அம்மா.

உலகம் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும், எனக்கு  தெரியும். நீங்கள் அன்புக்காக தான் அத்தனையும் செய்தீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனுடன் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும் பதியேற்பு நிகழ்ச்சியின் போது  மூத்த தலைவரான அஜய் மகான் சோனியா காந்தியின் பெருமைகளை கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |