பிரான்ஸ் நாட்டில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மோனலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயற்சித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
16ம் நூற்றாண்டில் லியனார்டோ டாவின்சி என்ற புகழ் பெற்ற ஓவியர் வரைந்த மோனலிசா ஓவியமானது உலகப் புகழ் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த ஓவியம் பிரான்ஸில் இருக்கும் பாரிஸ் நகரத்தின் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த அருங்காட்சியகத்திற்கு வயதான பெண்மணி ஒருவர் சர்க்கர நாற்காலியில் வந்திருக்கிறார்.
அவர் மோனலிசாவின் ஓவியத்திற்கு அருகில் சென்றவுடன் சக்கர நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்து நின்றார். அப்போது ஒரு ஆண் வயதான பெண்மணி போன்று வேடமிட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபர் மோனாலிசாவின் ஓவியத்தில் கேக்கை பூசியிருக்கிறார்.
Maybe this is just nuts to me💀but an man dressed as an old lady jumps out of a wheel chair and attempted to smash the bullet proof glass of the Mona Lisa. Then proceeds to smear cake on the glass, and throws roses everywhere all before being tackled by security. 😂??? pic.twitter.com/OFXdx9eWcM
— Lukeee🧃 (@lukeXC2002) May 29, 2022
உடனே, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்றனர். எனினும், அந்த நபர் பூசிய கேக் ஓவியத்தின் மீது இருக்கும் கண்ணாடியில் பட்டதால் ஓவியத்திற்கு எந்த சேதமும் ஏற்படாமல் போனது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.