Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாயின் பரிதாப நிலை… மர்ம நபர்களின் கைவரிசை… தேடும் வேட்டையில் காவல்துறையினர்…!!

விவசாயின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாடியந்தல் பகுதியில் கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விவசாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விவசாய வேலை இல்லாததால் சமையல் வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதனை அடுத்து அவரின் மனைவி தங்களின் மாடுகளை மேய்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மாலை நேரத்தில் கதிரவனின் மனைவி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் உள்ளே சென்று பீரோ வைத்திருந்த அறையை பார்த்த போது அவை உடைக்கப்பட்டு அதிலிருந்து 1 1/2 லட்சம் ரூபாய் மற்றும் 7 பவுன் தங்க நகையும் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி கதிர்வேல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் கதிர்வேல் மற்றும் அவரது மனைவியும் வெளியில் சென்றிருப்பதை அறிந்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |