Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மோசடி…. கைது செய்யப்பட்ட தம்பதிகள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கணவன் மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் ஸ்ரீநிவாசன் என்ற பா.ஜ.க பிரமுகர் வசித்து வருகிறார். இவருக்கு கனகதுர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கணவன் மனைவி இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஸ்ரீனிவாசன் மோசடி வழக்கில் ஏற்கனவே முன்ஜாமீன் வாங்கி இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

Categories

Tech |