போலியான நிறுவனம் நடத்தி தனியார் நிறுவன உரிமையாளர் போலி ரசீதுகள் மூலம் 2.30 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு கிருத்திக் ஸ்டீஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி போலியாக ரசீதுகள் மூலம் மோசடி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சட்டத்திற்கு புறம்பாக போலியான நிறுவனம் நடத்தியதும் அந்த நிறுவனத்தின் பெயரில் சரக்குகள் இன்றி வெறும் போலி ரசீதுகள் மூலம் 2.38 கோடி ரூபாய் உள்ளீட்டு வரியை அரசிடமிருந்து பெற்று மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் துறையினர் போலியான பெயரில் நிறுவனம் நடத்தி வந்த உரிமையாளர் கணேசன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.