Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வாட்ஸ் அப்பில் வந்த ‘க்யூ ஆர்க்கோடு’….. ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

நூதன முறையில் தனியார் நிறுவன ஊழியரிடமிருந்து பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் பிரிட்ஜ் மற்றும் பர்னிச்சர்களை விற்பனை செய்ய போவதாக ஒரு செல்போன் செயலி மூலம் அகமது விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து அகமதை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டு சாமான்களை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். அதன் பின் வாட்ஸ் அப் மூலம் தான் அனுப்பும் க்யூ ஆர்க்கோடை நீங்கள் ஸ்கேன் செய்த பிறகு வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விடுகிறேன் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அதனை நம்பிய அகமது வாட்ஸ் அப்பில் வந்த ‘க்யூ ஆர்க்கோடை ஸ்கேன் செய்த உடனே அகமதின் வங்கி கணக்கிலிருந்து 96 ஆயிரத்து 666 ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அகமது உடனடியாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |