Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எல்லாத்தையும் சொல்லிடாங்க” உண்மை என்று நம்பிய அதிகாரி… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அதிகாரியின் வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் இருக்கும் அரசு அலுவலகத்தில் மாலதி என்பவர் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் மாலதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு உங்களது ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிவிட்டது எனவும், அதனை புதுப்பிக்க வேண்டும் எனவும் அந்த நபர் மாலதியிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஏ.டி.எம் கார்டின் ரகசிய குறியீட்டு எண் மற்றும் ஒடிபி போன்றவற்றை அதிகாரியான மாலதி அந்த மர்ம நபரிடம் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு மாலதியின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப் பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மாலதி உடனடியாக திருவல்லிக்கேணி சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து பணம் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |