Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுக்கு பணம் அனுப்பிருங்க…. தலைதெறிக்க ஓடிய வாலிபர்… நூதன முறையில் மோசடி சம்பவம்…!!

வாலிபர் ஒருவர் ஆன்லைனில் பணம் அனுப்பும் படி கூறிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் ஜெயப்பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயப்பிரகாஷ் கமிஷன் அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று ஆன்லைன் மூலம் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு தனது வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம் செய்யும் வேலையை பார்த்து வருகிறார். இதனையடுத்து இவரது கடைக்கு வந்த ஒரு வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு 4 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பும்படி கூறியுள்ளார்.

அதன்பின் ஜெயபிரகாஷ் தனது வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்துள்ளார். இதனை அடுத்து அந்த வாலிபரிடம் பணத்தை கேட்டதற்கு அவர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தை ஜெயபிரகாஷ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான அந்த வாலிபரின் உருவத்தை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |