Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பணம் தர மறுப்பு… டாஸ்மார்க் ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற கொள்ளையன்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை கடைக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை இரவு கடையை மூடிவிட்டு விற்பனையான பணத்துடன் வீட்டிற்கு திரும்பிச் சென்ற ராஜாவை கடையை மூடவிடாமல் வழிமறைத்து மர்ம நபர்கள் கடைக்குள் நுழைந்தனர்.

Image result for கத்தியால் குத்தி கொலை

பின் விற்பனையாளர்களிடம் இருந்த பணத்தை தருமாறு மிரட்டினர். இதையடுத்து விற்பனையாளர் பணத்தை தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த குருபரப்பள்ளி காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |