Categories
மாநில செய்திகள் வைரல்

கட்டுக்கட்டாக பணம்…… வைரலாகும் வீடியோ….. கதறும் திமுக தலைமை….!!

திமுக பொருளாளர் துரைமுருகன் கல்லூரியில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் திமுக பொருளாளர் துரைமுருகனின் வேலூர் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மேலும் அவருக்கு சொந்தமான பண்ணை வீடு , கல்லூரி என இந்த சோதனை தொடர்ந்து நடத்தைப்பெற்றது. மேலும் இந்த சோதனையில் இரண்டு கட்டைப்பையில் ஆவணங்கள் மற்றும் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

திமுக பொருளாளர் துரைமுருகன் க்கான பட முடிவு

இந்நிலையில் இன்று துரைமுருகனின் நண்பரும் திமுக நிர்வாகியுமான சீனிவாஸ் என்பவரின் குடோனில் வருமான வரி சோதனை நடத்தியது.மேலும்  இன்று வேலூரில் உள்ள ஒரு சிமெண்ட் குடோனில் புதிய ரூபாய் நோட்டுகள்  கட்டுக்கட்டாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.இதனால் திமுக தலைமை பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.  இந்த பணம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |