கடலூரில் மீனவரிடம் சிப்பி வாங்கி 1 1/4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழகுடாவை சேர்ந்த அறிவு என்பவர் மீனவர். இவரிடம் சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ரூபாய் 110க்கு ஒரு கிலோ சிப்பியை பேசி மொத்தம் 1223 கிலோ சிப்பி வாங்கியுள்ளார்.
இதையடுத்து நரேஷ், அறிவுக்கு கொடுக்க வேண்டிய 1 லட்சத்து 34 ஆயிரத்து 530 இல் பத்தாயிரம் மட்டும் தான் கொடுத்துள்ளார். மீதி பணத்தை தரவில்லை. அறிவுவிடம் பலமுறை பணத்தை கேட்டும் அவர் தராமல் மோசடி செய்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்து அறிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.