Categories
மாநில செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு….. கோர்ட்டின் கிடுக்குப்பிடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடியில் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன தேவ சகாயம், அன்னராஜ், சகாய ராஜன், பிரபு ஆகியோர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீதான இருக்கும் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது இருக்கும் அரசியல் வெறுப்புணரின் காரணமாகவே வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது எனவும் அந்த வழக்கில் எங்களையும் இணைக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

வாதங்கள் அனைத்தும் முடிவு பெற்ற நிலையில் நீதிபதி வழக்கை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில் வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ததோடு அமலாக்க துறையின் கோரிக்கை மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் தேவ சகாயம் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார் ‌

Categories

Tech |