பணம் என்றால் எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டியில் படுப்பார் என்று வேலூரில் TTV தினகரன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாண்டு ரங்கன் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவருக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV.தினகரன் வாக்கு சேகரித்தார். அப்போது வேலூர் வாலாஜாபேட்டையில் மக்களிடையே பேசும் போது ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில் , நம்மால் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் நமக்கு துரோகம் செய்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அம்மாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க கூடாது என்று சொன்ன கட்சிகளோடு கூட்டணி வைக்கிறார்கள்.
மேலும் பேசிய TTV.தினகரன் , நகையை அடமானம் வைத்து பார்த்திருக்கின்றோம் , சொத்தை அடமானம் வைத்து பார்த்து இருக்கின்றோம் ஒரு கட்சியை அடமானம் வைத்து விட்டார்கள். உண்மையான கொள்கை பிடிப்பு இருந்தால் PMK-வுடனும் , DMDK_வுடனும் கூட்டணி வைக்கிறதுக்கு நடுரோட்டில் இருக்கிற எலக்ட்ரிக் லைன்ல தூக்கு மாட்டிட்டு கொள்ளலாம். பழனிசாமி பணம் தாரேன்னு சொன்னீங்கன்னா சவப்பெட்டியில் கூட படுத்து விடுவார்கள். பில்கேட்ஸ் மாதிரி ஒரு மைக் மாட்டிக்கிட்டு எதோ ஒரு பில்கேட்ஸ் , அமெரிக்க ப்ரெசிடெண்ட் கிளிண்டன் மாதிரி என்று TTV தினகரன் கிண்டல் செய்துள்ளார்.