தமிழ்நாட்டில்இன்று காலை 7 மணியளவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த இரண்டு தினங்களாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான முகவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி முகவர் அனுமதி சீட்டு வழங்குவதில் முறைகேடு இருப்பதாகக் கூறி ஆளும் கட்சிகள் மற்றும் பாஜகவினர் கூட்டணி கட்சியினர் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்பு ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் என்பவர் திமுகவினருக்கு ஆதரவாக வாக்குச்சாவடி முகவரி சீட்டு வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், 200க்கும் மேற்பட்ட அதிமுக கூட்டணி கட்சியினர், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழனி- திண்டுக்கல் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடி பஞ்சாயத்து இணை இயக்குனர் கங்கா தாரணி மறியலில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.