Categories
சினிமா தேசிய செய்திகள்

பண மோசடி வழக்கு…. நடிகை ஜாக்குலினிக்கு நிபந்தனை ஜாமீன்….. கோர்ட்டின் புதிய உத்தரவு…..!!!!!

பெங்களூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறையில் இருந்த போது கூட ஒரு தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனால் சுகேஷ் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு வெளியிலிருந்து பிரபல நடிகை ஜாக்குலின் உதவி செய்தது தெரியவந்தது. அதோடு ஜாக்குலின் மற்றும் சுகேஷ் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆனது.

அதன் பிறகு சுகேஷ் தன்னுடைய காதலிதான் ஜாக்குலின் என்று கூறினார். ஆனால் மோசடிக்கும் அவருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிய நிலையில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல கட்ட விசாரணைகளை நடத்திய நிலையில் ஜாக்குலின் பெயரையும் குற்றவாளிகள் லிஸ்டில் சேர்த்துள்ளது. இந்நிலையில் நடிகை ஜாக்குலின் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள, நிலையில் சிபிஐ அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதாவது ஜாக்குலினிடம் நிறைய பணம் இருப்பதால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விடுவார் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஜாக்குலினுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் 50,000 பிணைய தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு கூறியதோடு, தனிநபர் உத்திரவாதம் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர் ‌

Categories

Tech |