Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சியில் காங்கிரஸ் ”சிக்கிய முதல்வர் மாப்ள” குற்றப்பத்திரிகை தாக்கல் ….!!

ம.பி  முதல்வர் கமல்நாத் மருமகன் ரதுல் பூரி மீதான பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறை சார்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மூலம் 354 கோடி ரூபாய் பெற்ற கடனை திரும்ப செலுத்தாத மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரியை வங்கி மோசடியாளர் என அந்த வங்கி குற்றம் சாட்டியது. இதையடுத்து பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ரதுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

வங்கியில் கடன் பெறுவதற்காக பல்வேறு போலி ஆவணங்களை வழங்கியதாகவும் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி குற்றச்சாட்டுகளைக் கூறியது.தற்போது அமலாக்கத் துறை சார்பாக ரதுல் பூரி மீதான பண மோசடி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரதுலின் தந்தை தீபக் பூரி, தாய் நீதா ஆகியோருக்கும் இந்த மோசடியில் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.ஏற்கனவே அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் ரதுல் பூரியின் காவலை டெல்லி உயர் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |