வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் இரண்டு லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் வசித்து வரும் கண்ணன் என்பவர் அதிமுக மீனவர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு மீன்வள நல வாரிய தலைவராகவும் இருந்தார். நாகப்பட்டினத்தில் உள்ள விழிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்ற 2016 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காவலாளி வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு 2 லட்சம் தர வேண்டும் எனவும் வசந்தகுமாரிடம் கண்ணன் கேட்டிருக்கின்றார்.
அதற்கு வசந்தகுமார், கண்ணனிடம் இரண்டு லட்சம் கொடுத்திருக்கின்றார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு கண்ணன் வேலை வாங்கி தரவில்லை. இதை தொடர்ந்து வசந்தகுமார் சென்ற மார்ச் மாதம் கண்ணனிடம் தான் கொடுத்த பணத்தை திரும்பிக் கொடுக்குமாறு கேட்டு இருக்கின்றார். ஆனால் அதற்கு வசந்தகுமார் கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகின்றது. இதை அடுத்து வசந்தகுமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றார்கள்.