Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துப்புரவு பணியாளர் தவற விட்ட பணம்…. சாமர்த்தியமாக செயல்பட்ட காவல்துறையினர்…. குவியும் பாராட்டுகள்…!!

திருச்செந்தூர் கோவில் துப்புரவு பணியாளர் பேருந்தில் தவறவிட்டு 5,000 ரூபாய் பணத்தை காவல்துறையினர் உடனடியாக மீட்டு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமி நகர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணக்கிளி என்ற மனைவி உள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணக்கிளி தனது மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாயை ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து எடுத்துள்ளார். அதன் பிறகு அந்தப் பணத்தையும் கார்டையும் ஒரு பர்சில் வைத்து தனது கூடையில் கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து பஞ்சவர்ணக்கிளி நெல்லை செல்லும் அரசு பேருந்தில் ஏறி குரும்பூர் பேருந்து நிலையத்தில் இறங்கி விட்டு கூடையை பார்த்தபோது அதிலிருந்த பர்ஸ் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக குரும்பூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் குரும்பூர் காவல்துறையினர் கொடுத்த தகவலின் படி செய்துங்கநல்லூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் செய்துங்கநல்லூர் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்த பேருந்தை தடுத்து நிறுத்தி துப்புரவு பணியாளர் பஞ்சவர்ணக்கிளி பேருந்தில் தவறவிட்ட 5 ஆயிரம் ரூபாய் மற்றும் கார்டு இருந்த பர்ஸை பத்திரமாக மீட்டு விட்டார். அந்த பணம் சிறிது நேரத்திலேயே குரும்பூர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து தான் தவறவிட்ட சம்பளப் பணத்தை மீட்டுக் கொடுத்த காவல்துறை அதிகாரிக்கு பஞ்சவர்ணக்கிளி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |