பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து குழந்தைகளுக்கு எப்படி கற்றுத்தர வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
பணத்தை சேமிப்பது, செலவு செய்வது போன்றவை அனைத்தும் மக்களும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அடிப்படையான விஷயம். குழந்தைகள் வளரும் போது அவர்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவற்றை எப்படி சேமிப்பது என்பதை முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பல்வேறு வழியில் கிடைக்கும் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாமல் இளம் பருவத்திலேயே சேமிக்கக் கற்றுக் கொடுத்தால் எதிர்காலத்திற்கு அவர்கள் தயாராவார்கள்.
சேமிப்பின் பயனால் முதலீடுகளில் கை வைக்கலாம். வயது வராத சிறுவர்களின் பேரில் பெற்றோர் சில முதலீடுகளை மேற்கொள்ள முடியும். ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலகங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட், பத்திரங்கள் போன்றவற்றில் முதலில் செய்ய முடியும். பிள்ளைகள் தங்கள் கைவசம் இருக்கும் பணத்தை முறையாக நிர்வகிப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும் .
எப்படி பட்ஜெட் போடுவது என்பது இளம் வயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் பைனான்ஸ் அறிவும் கூடும். வரி குறித்த ஆழமான விஷயங்களை சொல்லி குழப்பி விடாமல். அடிப்படை விஷயங்களை மட்டும் அவர்களுக்கு கூறவேண்டும். வருமானவரி என்றால் என்ன போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.