Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேர்தல் வந்தாச்சு… தீவிரப்படுத்தப்படும் கண்காணிப்பு… ஆவணத்துடன் இருக்கும் பணம் தப்பிக்கப்படும்…!!

வாகன சோதனையில் வியாபாரிகளிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தேர்தல் தேதி அறிவித்த ஒரு சில நாட்களிலேயே பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஏழுமலை என்பவர் கொண்டுவந்த 4.75 கிலோ வெள்ளி கொலுசு கம்பிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் அரபிக் கல்லூரி அருகே அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பைப் வியாபாரி ராமனின் காரை நிறுத்தி அவர் கொண்டுவந்த 175560 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பணமும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் கொண்டுவந்தால் மட்டுமே பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |