Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திணறிய துணி வியாபாரி…. அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்விகள்…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…!!

ஆவணமின்றி கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேர் அழகிரி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காரில் வந்த நபர் துணி வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் பணம் பற்றிய ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஆவணங்கள் இல்லாததால் 2 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |