Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்… ஹோட்டலில் தங்கியிருந்த நபர்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

விடுதியில் தங்கியிருந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் 12 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பறக்கும் படை குழுக்கள் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நாகர்கோவிலை சேர்ந்த நிவாஸ் என்பவர் பணத்துடன் தங்கியிருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியபோது அவர் 3 லட்சம் பணத்தை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாத காரணத்தினால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |