பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் சுதாகர் பால் வியாபாரத்தை முடித்து விட்டு தனது சரக்கு வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெட்ரோல் நிலையத்தில் தனது சரக்கு வாகனத்திற்கான டீசல் போட்டுள்ளார். அதன்பிறகு சரக்கு வாகனத்தில் சுதாகர் வைத்திருந்த 35 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர்க்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.