Categories
அரசியல்

வேட்பாளர்களின் செலவுகள் கண்காணிப்பு…… செலவின பார்வையாளர்கள் தமிழகம் வருகை…!!

நாடாளுமன்ற தேர்தலையடுத்து தமிழகத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர்கள் வருகின்றனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையிலிருந்து 26ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது . பின்னர்  27ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்து 29ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள்  வருகின்றனர் .

Image result for வேட்பாளர்களின் செலவு

மக்களவைத் தேர்தலில் ஒரு வேட்பாளரை 70 லட்சம் ரூபாய் வரை செலவிடலாம் . அந்த வகையில்  வேட்பாளர்களின் விளம்பர செலவுகள் , கட்டியுள்ள கொடிகள் மற்றும் பயன்படுத்தும் வாகனம் குறித்த செலவுகளை இந்த குழு ரகசியமாக கண்காணித்து  தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பும். இந்நிலையில் இந்த குழு இன்று இரவு அல்லது நாளை காலை தமிழகம் வர உள்ளதாக தெரிகின்றது.

Categories

Tech |