Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. பேருந்தில் அடிபட்ட குரங்கு… பறிமுதல் செய்த வனத்துறையினர்…!!

பேருந்தை இயக்கிய போது எதிர்பாராத விதமாக அதில் அடிபட்டு 3 வயது பெண் குரங்கு இறந்துவிட்டது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து அந்த மாநில அரசு பேருந்து இரவு நேரத்தில் புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த டிரைவர் பிலிகுண்டுலு பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு வனப்பகுதி சாலையில் நின்று கொண்டிருந்த குரங்குகளுக்கு பழங்களை கொடுத்துள்ளார். அதன்பின் பேருந்தை இயக்கிய போது, பேருந்தில் மூன்று வயதான பெண் குரங்கு எதிர்பாராதவிதமாக அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர் அந்த கர்நாடக மாநில பேருந்தை பறிமுதல் செய்து விட்டனர். இதனையடுத்து அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறு பேருந்தில்  அனுப்பப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி டிரைவர் ஆனந்த் மீது அஞ்செட்டி வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவருக்கு 7,000 ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த அபராதத் தொகையை செலுத்திய பின் பேருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அஞ்செட்டி வனச்சரகர் அலுவலகத்தில் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்த குரங்கின் உடலானது அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |