அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு தனது குட்டியுடன் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராம பகுதிக்குள் வருகின்றன. இவ்வாறு வரும் வன விலங்குகள் விபத்துக்களில் சிக்கியும், நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை குரங்கு ஒன்று தனது குட்டியுடன் கடக்க முயற்சி செய்துள்ளது.
அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் மோதி குரங்கும், அதன் குட்டியும் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குரங்குகளை கைப்பற்றி அதன் உடலை புதைத்து விட்டனர்.