நைஜீரிய நாட்டு நபர் சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை பாதிப்போடு கம்போடியா தப்பிய நிலையில் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார்.
நைஜீரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர், தாய்லாந்தில் வசித்து கொண்டிருக்கிறார். அவர், திடீரென்று குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, தாய்லாந்து நாட்டில், இரண்டு விடுதிகளுக்கு சென்றிருக்கிறார்.
இது கண்டறியப்பட்டவுடன், அந்த இளைஞர் நாட்டைவிட்டு தப்பி விட்டார். இதனைத்தொடர்ந்து, தாய்லாந்து நாடு முழுக்க அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவரின் மொபைல் எண், கம்போடியாவில் இயங்கியது தெரிய வந்தது.
அதன்பிறகு, அந்நாட்டின் போலீசார் பல பகுதிகளிலும் தேடி அவரை ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டார்கள். அதனைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.