குரங்கு காய்ச்சல் பாதிப்பு, சுமார் 12 நாடுகளில் 92 நபர்களுக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா, உலக நாடுகளை புரட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு பல நாடுகளில் பரவிக்கொண்டிருக்கிறது. தற்போதுவரை சுமார் 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும், 28 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்ற சந்தேகம் இருக்கிறது.
எனினும், தற்போது வரை இந்த பாதிப்பால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டால், அது ஆபத்து என்று உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.