Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் குரங்கம்மை பாதிப்பு…. விழிப்புணர்வுடன் இருங்கள்…. பிரிட்டன் அரசு எச்சரிக்கை…!!!

பிரிட்டன் நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் குரங்கு அம்மை நோயில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டுமென்று தங்கள் மக்களை அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

பிரிட்டன் நாட்டின் சுகாதார பாதுகாப்பு நிறுவனமானது, குரங்கம்மை நோய் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, குரங்கு அம்மை நோய் தொற்று அதிக அளவில் இருக்கிறது. இந்த நோய் ஓரின சேர்க்கையாளர்களில் ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.

தற்போதுவரை ஓரினச் சேர்க்கையாளர்களான ஆண்கள் தான் 96% பாதிப்படைந்து இருக்கிறார்கள். இதில் 37 வயது கொண்ட இளைஞர்கள் தான் அதிகம். எனவே, குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பதாக சந்தேகம் உள்ளவர்கள், வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், பாலுறவில் விழிப்புணர்வு தேவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |