மனிதனின் வாயை திறந்து பார்க்கும் குரங்கின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது
வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளையும் அது செய்யும் சேட்டைகளையும் காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் குரங்கு ஒன்று மனிதனின் வாயை ஆச்சரியமாக பார்க்கும் காணொளி ஒன்றை பதிவிட்டார்.
அதில் மேசையின் மீது அமர்ந்திருந்த இரண்டு குரங்குகளில் ஒன்று அருகிலிருந்த ஒருவரின் வாயை திறந்து பார்க்கின்றது. பின்னர் குரங்கு அதன் வாயை அளவிட்டு பார்க்கிறது. மேலும் மனிதனின் வாயை திறந்து பார்க்கிறது இவ்வாறு மனிதனின் வாய் எனது வாயை விட வித்தியாசமாக உள்ளது என பலமுறை வியந்து பார்ப்பது போன்ற காட்சி பதிவாகியிருந்தது. அவர் பதிவிட்ட அந்த காணலியில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Your mouth is different than mine😳😳😳😳
The world loves Dean Schneider, including the ones he rehabilitates🙏 pic.twitter.com/q5p59yh7TV
— Susanta Nanda (@susantananda3) July 12, 2020