Categories
உலக செய்திகள்

குரங்கு வைரஸால் 80 பேர் பாதிப்பு…. உலக சுகாதார மையம் எச்சரிக்கை….!!!

உலக சுகாதார பயமானது நாடுகளில் என்பது நபர்களுக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை கொரோனா மொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீப நாட்களாக குரங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து போன்ற நாடுகளில் குரங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது.

இதுமட்டுமன்றி கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருகிறது. தற்போது வரை 80 நபர்களுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இன்னும் ஐம்பது நபர்களின் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார், 11 நாடுகளில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. இந்த குரங்கு வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் தோல் அரிப்பு, நிணநீர் கணுக்களில் வீக்கம், காய்ச்சல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது எனினும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கடும் பாதிப்புகளை உண்டாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |