Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்க ஏன் இன்னைக்கு வரல… காவல் நிலையத்திற்கு தேடி சென்ற குரங்குகள்… பசியை போக்கிய காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பசியால் தவித்த குரங்குகள் உணவுக்காக காவல் துறையினரை தேடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் மனிதர்களை நம்பி வாழும் நாய்கள், பறவைகள், குரங்குகள் போன்ற ஜீவ ராசிகள் உணவில்லாமல் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா தளத்தில் இருக்கும் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருவதால் சுற்றுலாதளம் மூடப்பட்டுள்ளதால் குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காவல் துறையினர் சித்தன்னவாசல் பகுதிக்கு சென்று குரங்குகளுக்கு தினமும் உணவு, பழங்கள் மற்றும் பொறி வழங்கி பசியை போக்கி மனித நேயத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காவல் துறையினர் சித்தன்னவாசல் பகுதிக்கு ஒரு நாள் செல்லாததால் சில குரங்குகள் காவல் துறையினரை தேடி உணவிற்காக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. இதனால் காவல் துறையினர் அங்கு வந்த குரங்குகளுக்கு பொறி, தண்ணீர், பழங்கள் உள்ளிட்ட உணவுகளை கொடுத்து குரங்குகளின் பசியை தீர்த்து வைத்துள்ளனர். காவல் துறையினரின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |