உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியொனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட மோனோலிசா ஓவியத்தின் பிரதிகள் ஏலம் விடப்படவுள்ளது.
உலகப்புகழ் பெற்ற ஓவியரான லியொனார்டோ டா வின்சியால் மோனாலிசா ஓவியம் கடந்த 1503 ஆம் ஆண்டு வரையப்பட்டது. இந்த ஓவியமானது பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில வருடங்களிலேயே இந்த ஓவியத்தை போன்ற பிரதிகளை ஓவியர்கள் வரைந்தனர்.
அவ்வாறு வரையப்பட்ட பிரதி ஓவியத்தில் ஒன்று கடந்த ஜூன் மாதம் 25,00,00,000க்கு ஏலம் விடப்பட்டது. தற்போது பிரான்சில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அது போன்ற மற்றொரு பிரதி ஓவியம் ஏலம் விட தயாராக உள்ளது. குறிப்பாக அந்த ஓவியமானது 1,70,00,000 வரை ஏலம் போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.