Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” பின்னணி இசை தொடங்கப்பட்டது … வெய்ட்டிங்கில் வெறியாகும் ரசிகர்கள் ..!!

“அசுரன்” படத்தின் வெளியீட்டுக்காக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக கூறியுள்ளார் .

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் “அசுரன்” . இப்படத்தில் தனுஷ் , மஞ்சுவாரியார் , பாலாஜி சக்திவேல் , பிரகாஷ்ராஜ்,  பசுபதி, சுப்பிரமணியன் சிவா, பசுபதி, ஆடுகளம் நரேன் , யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 4 என படக்குழுவினரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for tamil actor jv prakash

அதனால் இப்படத்தின் பணிகளை விரைந்து முடிக்க படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன்பின் படத்தின் வெளியீட்டுக்காக பின்னணி இசையை தொடங்கிவிட்டதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் . இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் பின்னணி இசை தெறிக்க வேண்டும் என்று ஜிவி பிரகாஷ்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |