4 நாட்களில் 109.28 கோடி பெற்று வசூலில் புதிய சாதனையை நேர்கொண்டப்பார்வை திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
ஹிந்தியில் பெண்கள் சுதந்திரத்தை மையப்படுத்தி வெளியான pink திரைப்படத்தை, தீரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற தலைப்பில் ரீமேக் செய்துள்ளார். இதில் தல அஜித், பிக்பாஸ் பிரபலமான அபிராமி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி படம் வெளியானது.
தமிழிலும் முதல் நாளிலேயே மிகப்பெரிய பாராட்டுக்களையும், ஆதரவுகளையும் இப்படம் பெற்றது. நடிகர் அஜித் அவர்களின் அசாத்திய நடிப்பால் நாள்தோறும் ஆர்ப்பரிப்பு குறையாமல் திரையரங்குகளில் நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு கூட்டங்கள் அதிகரித்த வண்ணமே இருந்தனர். இந்நிலையில் எந்த திரைப்படமும் நிகழ்த்திடாத சாதனையை தற்போது நேர்கொண்டபார்வை திரைப்படம் நிகழ்த்தியுள்ளது. நான்கு நாட்களில் 109.28 கோடி வசூல் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இச்சாதனையானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.