மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியானது மொனாக்கோ நாட்டில் நடைபெற்றது.
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ,நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டி நடந்தது. இந்த போட்டியில் தரவரிசை பட்டியலில் 5வது இடத்தை பெற்றிருக்கும் கிரீஸ் நாட்டை சேர்ந்த வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் , ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார். இதில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்டெபனோஸ், ரூப்லெவை தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல்முறையாக பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு பரிசாக இரண்டரை கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. இதுகுறித்து ,வெற்றி பெற்றதை பற்றி சிட்சிபாஸ் கூறும்போது, ‘இந்த வாரம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வாரமாக’ அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ,சொல்ல வார்த்தைகள் இல்லை என்று உணர்ச்சிவசத்துடன் கூறினார்.