Categories
பல்சுவை

மாசம் 5000 பென்ஷன் வேண்டுமா..? அப்ப இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க..!!

மாதம் 5000 வரையில் பென்சன் வழங்கும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் இவ்வாறு இணைவது அதன் பயன் என்ன? என பார்க்கலாம்.

அடல் பென்சன் யோஜனா

பிரதமர் மோடி 2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது திட்டம் அடல் பென்சன் யோஜனா திட்டம். தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன் அடைவதற்காக இந்த திட்டத்தை உருவாக்கினார். இந்த திட்டத்தில் இணையும் தொழிலாளர்கள் மாதம் 5000 வரை பயன்பெற முடியும். குறைந்தபட்சம் பென்சன் தொகை காண உத்தரவாதமும் அளிக்கப்படும்.

அனைவருக்குமே தங்களின் கடைசி காலத்தில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும், அதற்கு இந்த பென்ஷன் மிக முக்கியமானதாக இருக்கும். அனைத்து தேசிய வங்கிகளில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. பதிவு செய்வதற்கான படிவங்கள் ஆன்லைனிலும் வங்கி கிளைகளிலும் கிடைக்கின்றன. நீங்கள் படிவத்தை பதிவிறக்கம் செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம் அல்லது நேரடியாக வங்கியில் சென்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.

என்னென்ன ஆவணங்கள்

உங்களிடம் வங்கி சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். உங்களது செல்போன் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் அட்டையின் புகைப்படம் நகலை இணைக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு உறுதிப்படுத்தல் எஸ்எம்எஸ் வரும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கு நீங்கள் பதிவுசெய்யும் வயதை பொறுத்து பங்களிக்க வேண்டும்.

நீங்கள் 18 வயதில் இந்த திட்டத்தில் இணைய இருந்தால் ஒவ்வொரு மாதமும் 42 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் பங்களிப்பு ஒருவேளை 40 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைந்தால் பங்களிப்பு தொகை ரூ.291 ஆக இருக்கும். ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு 5000 பென்சன் கிடைக்கும் வேண்டும் என்றால் 18 வயதில் தொடங்கி ரூ. 210 சேமிக்க வேண்டும். அதேபோல் 40 வயது தொடங்கி ரூ. 1456 பங்களிப்பை வழங்க வேண்டும்.

Categories

Tech |