பாலிசி திட்டத்தின் மூலம் மாதம் 24 ஆயிரம் பெறவேண்டுமா? சிறந்த எதிர்காலம் திட்டத்தை பற்றி காண்போம்.
இது ஒரு சிறந்த ஓய்வூதிய முதலீட்டுத் திட்டமாகும். இது ஒற்றை பிரீமியம் கொண்ட பாலிசி. இந்த திட்டத்தின் தொடக்கத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை பெறுவீர்கள். அதோடு நீங்கள் எவ்வளவு முதலில் செய்கிறீர்களோ அதற்கு ஏற்ப மாத ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்திற்காக நீங்கள் எந்த ஒரு மருத்துவச் சான்றிதழ் தர வேண்டியதில்லை. இந்த திட்டத்தில் மருத்துவ கோரிக்கைகள் அல்லது வாழ்க்கைக்கான அபாயப் பாதுகாப்பு எதுவும் இல்லை.
இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் 30 வயது ஆகும். அதிகபட்சம் 85 வயது. அதேபோல் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்துகொள்ளலாம். அதிகபட்சம் என்பது இல்லை. உங்களது பாலிஸி முதிர்ச்சிக்கு என்று அதிகபட்ச வயது இல்லை. அதோடு இந்த பாலிசியின் சலுகை நீங்கள் மணி பேக் மூலம் பெறலாம். உங்கள் ஓய்வூதியம் ஆனது ஒருமுறை பிரீமியம் செலுத்திய உடன் தொடங்கிவிடும். ஓய்வூதியத்தை செலுத்த நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதை சார்ந்திருக்கும்.
உங்களால் வருடாந்திர ஓய்வூதியம் அல்லது காலாண்டு, மாதாந்திர என்று பிரித்துக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்ச ஓய்வூதியம் தொகையானது ஆண்டுக்கு 6,000 ரூபாயாக இருக்கும். அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாயாக இருக்கும். சில மணிபேக் பாலிசி எதிராக வங்கிகளில் நாம் கடனை பெற முடியும். ஆனால் எல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டத்தில் அப்படி எதுவும் பெற முடியாது. வேற என்ன சலுகைகள் என்பது இத்திட்டத்தில் உள்ளது என்றால் இந்தத் திட்டத்தில் இறப்புக்கும் பிறப்புக்கும் என நீங்கள் ஓய்வூதியத்தை தேர்ந்தெடுத்து இருந்தால் உங்கள் இறப்புக்கு பிறகு உங்களது துணைக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.