Categories
தேசிய செய்திகள்

மாதந்தோறும் ரூ.5000 பென்ஷன்… இந்தத் திட்டம் நிச்சயம் உங்களுக்கு உதவும்…!!!

மத்திய அரசு அறிவித்த அடல் பென்சன் யோஜனா திட்டம் மூலம் மாதம் ஐந்தாயிரம் பென்ஷன் பெறுவது எப்படி என்பதை இதில் பார்ப்போம்.

மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒன்று தான் இந்த அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana – APY).  இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தாலும், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். 2015 ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதலீடுகளை பி.எஃப்.ஆர்.டி.ஏ. என்ற பென்ஷன் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நிர்வகிக்கிறது. அனைத்து வங்கி மற்றும் தபால் நிலையங்கள் மூலம் இத்திட்டத்தில் சேரலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்

18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் திறக்கலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து ஒரு கணக்கைத் திறக்க முடியும்.

மாதாந்திர பங்களிப்புத் தொகை

18 வயதில் இத்திட்டத்தில் இணைபவர் மாதம் தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை 42 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். ரூ.42 செலுத்தி வந்தால் 60 வயதுக்குப்பின் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். ரூ.210 செலுத்தி வந்திருந்தால் 60 வயதுக்குப் பின் 5000 ரூபாய் கிடைக்கும். இந்த வகையில் இது செயல்படுத்தபட்டு வருகிறது. முதலில் மாதாந்திர பங்களிப்புத் தொகை செலுத்திய நாள் எதுவோ அதே நாளில் மாதம் தோறும் தானாகவே சேமிப்புக் கணக்கிலிருந்து மாதாந்திர பங்களிப்புத் தொகை கழித்துக்கொள்ளப்படும்.

உதாரணத்துக்கு 5ஆம் தேதி முதல் முறை பங்களிப்புத் தொகையை செலுத்தியிருந்தால், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதி அந்தத் தொகை தானாகவே கழித்துக்கொள்ளப்படும். இந்த வசதியை வசதியை விரும்பாதவர்கள் இதனை தவிர்க்கலாம். ஆனால், மாதம் தோறும் தாங்களே பணத்தைச் செலுத்த வேண்டும்.

தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் ஆரம்பத்தில் கனரா வங்கியில் பென்ஷன் கணக்கினை துவங்கியிருந்தால், பின்னர் இதனை வேறு வங்கிக் கிளைக்கும் மாற்றிக் கொள்ள முடியும். உண்மையில் அரசின் இந்த திட்டமானது 60 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தேவையான ஒன்று தான். எனவே உடனே கணக்கை தொடங்குங்கள் மாதந்தோறும் 5 ஆயிரம் பென்சன் தொகையை பெறுங்கள்.

Categories

Tech |