Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம்.

சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.?

இந்தியாவில் மட்டும் ஆஸ்துமாவுக்கு பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நுரையீரல் சம்பந்தமான நோய்க்கு 7.5 மில்லியன் மக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள். உயிருக்கே ஆபத்தாக  முடிகின்ற இந்த சுவாச பிரச்சனை எதற்காக வருகிறது  என்ற விழிப்பு உணர்வு மக்களிடையே இன்னும் இல்லை. ஒரு சிலருக்கு பார்த்தீர்களென்றால் மாடி மேலே மெதுவாக ஏறினாலே மூச்சு வாங்கும். இன்னும் சிலருக்கு பத்தடி சும்மா நடந்தாலே மூச்சு வாங்கும்.

சுவாச நோய் வந்து வாத கப தோஷம் அதிகமாகும் பொது வருகிறது என்று கூறுகிறார்கள். அதாவது வாதத்தையும் கபத்தையும் அதிகப்படுத்தும் விதமாக உணவு வகைகள் அடுத்து கொள்ளும்பொழுது இவை சுவாச நோயை உண்டு பண்ணுகிறது என்று கூறுகிறார்கள். உதாரணத்திற்கு..

  1. அதிக குளிர்ச்சி நிறைந்த உணவுகள்
  2. கொழுப்பு நிறைந்த உணவுகள்
  3. உளுந்து அதிகமாக எடுத்துக்கொள்வது
  4. தூசி புகையில் நிற்பது
  5. அதிக எடை தூக்குவது
  6. அதிகமாக உடற்பயிற்சி செய்தல்
  7. ரத்தசோகை
  8. புகைபிடித்தல்
  9. மலச்சிக்கல் ஏற்படுவது
  10. கவலை
  11. மன அழுத்தம்

இவையெல்லாம் சுவாசக்கோளாறு உண்டுபண்ணும். ஆரோக்கியமில்லாத சுவாசம் மற்ற எல்லா நோய்களை விட கொடுமையானது.  எந்த நோய்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று பார்த்தால்.

  • கட்டுப்படாத ஆஸ்துமா
  • முறையற்ற இதயத்துடிப்பு
  • கணுக்கால் வீக்கம்
  • அதிக ரத்தப்போக்கு
  • ரத்தசோகை
  • உடல் பருமன்
  • நுரையீரலில் ரத்த கட்டி
  • அலர்ஜி
  • நிம்மோனியா

நிமோனியா என்றால் நுரையீரல் அதிக கிருமிகளால் பாதிப்படைந்து இருக்கும். சளி பச்சை நிறமாக இருக்கும். 

  • நீண்ட கால சைனஸ் தொல்லை
  • மூக்கடைப்பு
  • மூக்கில் சதை வளர்ச்சி
  • நுரையீரல் புற்றுநோய்
  • ஒத்துக்கொள்ளாத வாசனைப் பொருள்

இந்த மாதிரியான காரணங்களினால் சுவாச நோய் ஏற்படுகிறது. பொதுவாக இதயத்தினால் போதுமான அளவு ரத்தத்தை பம்ப் பண்ண முடியாது. எல்லா உறுப்புகளுக்கும் போதுமான அளவு ஆக்சிஜன் சப்ளை கிடைக்காத போது மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதுவே தொடர்ந்து அடிக்கடி எழும் பொழுது கண்டிப்பாக அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தையும் சரி, அதற்கான ஆலோசனையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதை ஆரம்பத்திலேயே நாம் சரி செய்யாமல் விட்டு விட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

வீட்டிலிருந்தபடியே  சுவாசப் பிரச்சினையை ஆரம்ப நிலையில் சரி செய்ய 5 வழிமுறைகள்:

1. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொந்தரவாக இருந்தாலும், அலர்ஜி, எந்த விதமான தொற்றுநோயாக இருந்தாலும் சரியாகி விடும்.

 2. பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால் பாலில் மஞ்சள் சேர்த்து கண்டிப்பாக சாப்பிட வேண்டும். உடலில் எந்த விதமான பாக்டீரியா இருந்தாலும் நீங்கிவிடும்.

3. ஒரு வெற்றிலையோடு, 5 துளசி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். மிளகு 3 எடுத்துக்கொள்ளுங்கள். இவைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் சளி, சுவாச பிரச்சனை இவை அனைத்தும் நீங்கிவிடும்.

4. தண்ணீரில் நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை ஆவி பிடிக்கும் போது சுவாச பிரச்சனை சரியாகிவிடும்.

5. முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதுவே மூச்சு திணறல் பிரச்சினைக்கு ஒரு காரணமாக இருக்கும்.

6. தினமும் திரிபலா சூரணம், அரை நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் சேர்ந்த சூரணத்தை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும்.

7. சுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய ஒரு பயிற்சிதான் பிராணயமம் சுவாசப்பயிற்சி. இதை கண்டிப்பாக தினமும் செய்து வந்தாலே எந்தவிதமான தொந்தரவும் இருக்காது.

அதாவது உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும் . இரத்தம் சுத்தமாகும் பிராணாயாமம் செய்வதால் பல நன்மைகள் இருக்கிறது. இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணி வந்தால் இந்த மாதிரி ஆரம்பத்தில் இருக்குற சுவாச பிரச்சினையை நாம் வீட்டிலிருந்தபடியே சரி செய்து கொள்ளலாம்.

 

Categories

Tech |