Categories
மாவட்ட செய்திகள்

“10 பவுன் நகைக்காக”… வீட்டின் பின்பக்கம் நுழைந்து… மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!!

மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 10 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் சண்முகம் – ஜானகி . சண்முகம்  இறந்து விட்ட நிலையில் ஜானகி  மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர்களது  மகன் பாரிராஜன்  அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் . இவர் அதே பகுதியில் தனி வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு  திடீரென்று ஜானகியின் வீட்டு பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர்  அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை எடுத்து  சென்றுள்ளனர்.

நேற்று காலையில் ஜானகி வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுப்பதற்காக  பாரிராஜனும்  அவரது கார் டிரைவர் ஜான்சனும் அங்கே வந்துள்ளனர்.   அப்பொழுது ஜான்சன் ஜானகியை அழைத்துள்ளார் . ஜானகி  நீண்ட நேரமாகியும் வெளியே வராததால்  ஜான்சன் பின்பக்க வெளியே சென்று பார்த்துள்ளார் . அப்போது ஜானகி கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து பாரிராஜனிடம் சென்று தகவலை கூறியுள்ளார்.  பாரிராஜன்  ஓடி வந்து தனது தாய் கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார் .  மேலும் அவரது உத்தரவின்படி  4 தனிப்படை அமைத்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Categories

Tech |