Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாளுக்கும் அவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையடைந்த வள்ளியம்மாள் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வள்ளியம்மாள் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |