மூதாட்டியிடம் 7 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இளங்கோ வீதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இவர் ராஜவிநாயகர் கோவிலுக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கீதாவிடம் முகவரி கேட்பது போல கேட்டு அவர் அணிந்திருந்த 7 1/2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்த கோபால் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.