Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டி…. வழிப்பறியில் ஈடுபட்ட பெண்…. கைது செய்த போலீஸ்….!!

மூதாட்டியிடம் தங்க சங்கிலி பறித்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பலவூர் பகுதியில் பூர்ணத்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் இசக்கிமுத்து  இறந்து விட்டார். இந்நிலையில் பூர்ணத்தம்மாள் பட்டன் கல்லூரிலிருந்து உதவித்தொகையை பெற்றுக் கொண்டு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 2 1\2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மஞ்சள் பையில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயையும் பறித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து பூர்ணத்தம்மாள் சுத்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பட்டன் கல்லூர் பகுதியில் வசிக்கும் செந்தில் முருகன் என்பவரின் மனைவியான மகராசி என்பவர் நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மகராசியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |