மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கியம்மாள் கடையில் பால் வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் இசக்கியம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து இசக்கியம்மாள் வீரவநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில் விக்ரமசிங்கபுரம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு என்பவர் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விஷ்ணுவை கைது செய்தனர்.